Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

கடைசி நேரத்தில் ஏராளமான ஊழியர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை இணையதளத்தில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973, விதி 7(3)-ன் படி, அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை மூலம், அரசு ஊழியர்கள் அனைவரும் இணையதளம் வழியாக மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.இதன்படி, கடந்த டிசம்பர் 31, 2025-ல் முடிந்த ஆண்டிற்கான சொத்து விவரங்களை அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடைசி நேரத்தில் ஏராளமான ஊழியர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்தச் சிக்கல் மற்றும் பணிச்சுமை காரணமாகப் பலரால் குறித்த நேரத்திற்குள் சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இதனையடுத்து, கால அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இக்கோரிக்கையினைப் பரிசீலித்த தமிழக அரசு, அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை இணையதளத்தில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
முந்தைய செய்தி
சர்வதேச சந்தையில் காபி விலை கடும் வீழ்ச்சி: ரோபஸ்டா விலை 6% சரிவு!
அடுத்த செய்தி
ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

தொடர்புடைய செய்திகள்