Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விரைவில் டெண்டர்: வேலூரில் 10 கல் குவாரிகள்! வெளியான தகவல்

விரைவில் டெண்டர்: வேலூரில் 10 கல் குவாரிகள்! வெளியான தகவல்

தற்போது கரடிகுடி, அரியூர் அடுத்துள்ள சிறு களம்பூர், கரிகிரி பகுதிகளில் 4 கல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

கனிம வளத் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் விரைவில் 10 கல் குவாரிகள் திறப்பதற்கான டெண்டர் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் ஒப்பந்தக்காலம் முடிவடைந்தும் செயல்பட்டு வந்தன. அதேபோல, சில குவாரிகள் அரசு விதிகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்தன. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மூடப்பட்டன.

தற்போது கரடிகுடி, அரியூர் அடுத்துள்ள சிறு களம்பூர், கரிகிரி பகுதிகளில் 4 கல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் கட்டுக்கல், ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

எனவே, வேலூர் மாவட்டத்தில் கூடுதல் கல் குவாரிகள் திறக்கப்படுமா என்று மாவட்ட கனிம வள அதிகாரியிடம் கேட்டதற்கு, "வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக 10 கல் குவாரிகள் திறப்பதற்கான டெண்டர் விடத் திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிக்கைக்குப் பிறகு இதற்கான டெண்டர் விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எந்தெந்தப் பகுதியில் கல்குவாரி திறக்க அனுமதிக்கப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.

முந்தைய செய்தி
ரூ.1,014 கோடி திரட்டிய Bonfiglioli, Tonbo நிறுவனங்கள்!
அடுத்த செய்தி
அரசியலில் அந்தஸ்தை உயர்த்தும் காசியோ கடிகாரம் - பின்னணி என்ன?

தொடர்புடைய செய்திகள்