Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் கைது

சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் கைது

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் துறையினர் கானா விளக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்

பகிரவும் WhatsApp Facebook

தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து கைதிகள் 17 பேர் அக்.26-ம் தேதி இரவு சிறைக் காவலர்களை தாக்கி விட்டு ஓடினர். தப்பி ஓடிய 17 பேர்களில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 4 பேரை தேடி வந்த நிலையில் அவர்கள் சிறை வளாகம் அருகே உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி நடைபெற்றது. அங்கு மறைந்திருந்த பொன்முத்து செல்வன், ரெஜின் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் துறையினர் கானா விளக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து மேலும், தலைமறைவாகி இருந்த மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய 2 பேர் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால், தப்பியோடிய 17 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
3 புதிய ஆலைகளை அமைக்க ரூ.1,250 கோடி முதலீடு
அடுத்த செய்தி
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெண்டர் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்