Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

49-ம் ஆண்டு தொடக்க விழா: கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் சிறப்புத் தள்ளுபடி

49-ம் ஆண்டு தொடக்க விழா: கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் சிறப்புத் தள்ளுபடி
கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸின் 49-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சிறப்புத் தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை

எங்களது மதுரை, கோவை, சேலம், திருப்பூர், கோபி, குளித்தலை, ஊட்டி ஆகிய கிளைகளுடன் தொடர்ந்து கரூரிலும் சிறப்பான சேவையை வழங்கி வருகிறோம்.

பகிரவும் WhatsApp Facebook

கரூர் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ்டைல்ஸின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சிறப்பு தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து ஷோரூம் மேலாளர் சிவரத்தினம் கூறுகையில், "எங்களது மதுரை, கோவை, சேலம், திருப்பூர், கோபி, குளித்தலை, ஊட்டி ஆகிய கிளைகளுடன் தொடர்ந்து கரூரிலும் சிறப்பான சேவையை வழங்கி வருகிறோம். ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளோம்" என்றார். மகளிர், ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகளில் பல வியக்கத்தக்க தள்ளுபடிகளுடன் விற்பனை நடைபெறுகிறது. அதில் மகளிருக்கான சிறப்பு தள்ளுபடியில் ரூ.400 மதிப்புள்ள ஹெவி டர்க்கி சாரீஸ் ரூ.99-க்கும்,ரூ.290 மதிப்புள்ள ஜம்பி பிளாஸ் ஸ்னோ ரூ.99-க்கும்,ரூ.450 மதிப்புள்ள ஐசா குர்தீஸ் ரூ.249-க்கும், ரூ.590 மதிப்புள்ள லினன் டிஜிட்டல் பிரிண்ட் சாரீஸ் ரூ.299-க்கும், ரூ.490 மதிப்புள்ள ஷர்மிளி பாயில் பிரிண்ட் ஆன்லைன் சாரீஸ் ரூ.320-க்கும், 590 மதிப்புள்ள 3 ஃப்ரீடர் லீச்சி ஃபேன்ஸி சாரீஸ் ரூ.349-க்கும், ரூ.850 மதிப்புள்ள வாணி 2 பீஸ் செட் சல்வார் ரூ.499-க்கும், ரூ.800 மதிப்புள்ள சுமித்ரா 3 பீஸ் சல்வார் ரூ.549-க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.

இதேபோல் ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கான சலுகைகளைப் பொறுத்தவரையில் பிரிண்ட் டீ-சர்ட் – ரூ.99-க்கும், பாய்ஸ் கார்கோ சர்ட் ரூ.199-க்கும், ஹெவன் ஃபார்மல் சர்ட் மற்றும் கோஸ்டெக் சார்ட் சர்ட் ரூ.249-க்கும், பாய்ஸ் கார்கோ ஜீன்ஸ் பேண்ட் ரூ.330-க்கும், ஃபேன்ஸி பாபாசூட் ரூ.350-க்கும், முஷ்கி காட்டன் பேண்ட் மற்றும் விங்ஸ் கலர் ஜீன்ஸ் பேண்ட் ரூ.399-க்கும் நாட்டி பேண்ட் சர்ட் ரூ.620-க்கும் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் விழாக் கால சலுகையாக, ரூ.1000-க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் அழகிய பரிசுகள் வழங்கப்படுகின்றன. முற்றிலும் குளிரூட்டப்பட்ட 5 தளங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்ட ஷோரூமில், பட்டுப் புடவைகளுக்கென்றே மிகப்பிரம்மாண்டமான தனிப் பகுதி அமைந்துள்ளது. ஆடைகள் அனைத்தும் கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸின் சொந்த தயாரிப்பு என்பதால், மிகக் குறைந்த விலையில் தரமாக வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கார் பார்க்கிங் வசதியும் உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
நகை, ஆடம்பர பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் - விற்பனையில் வளர்ச்சி
அடுத்த செய்தி
தொழிற்சாலையில் மறுசுழற்சியை ஊக்குவிக்க வழிகாட்டும் சிஐஐ

தொடர்புடைய செய்திகள்