Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி பண்டிகை - திருச்சி டூ சிங்கப்பூருக்கு கூடுதல் விமானங்கள்

தீபாவளி  பண்டிகை - திருச்சி டூ சிங்கப்பூருக்கு கூடுதல் விமானங்கள்

இதன் மூலம் தீபாவளி காலத்தில் சொந்த ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி:

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு இரண்டு கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க உள்ளதாக ஸ்கூட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


இதன்படி, நவம்பர் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், நவம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இந்தச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் தீபாவளி காலத்தில் சொந்த ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.


இரு தேதிகளிலும் திருச்சி – சிங்கப்பூர் இடையிலான விமானம் (TR 753) இரவு 7.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.55 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். சிங்கப்பூர் – திருச்சி விமானம் (TR 752) மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

முந்தைய செய்தி
இடி மின்னலுடன் 2 நாள் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த செய்தி
இடைத்தேர்தலே அறிவிக்கவில்லை - விராலிமலையில் களத்தில் இறங்கிய தவெகவினர்!

தொடர்புடைய செய்திகள்