Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்

மின் வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்

கள உதவியாளர் பணியிடங்களுக்கான ஊதியம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 8,000 கள உதவியாளர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக 2027-ம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் 3,000 கள உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

புதிதாக நியமிக்கப்படும் கள உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.341.26 கோடி செலவாகும் என மின் வாரியத் தலைவர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். இந்தக் கருத்துருவைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி அளித்துள்ளது.

கள உதவியாளர் பணியிடங்களுக்கான ஊதியம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி மற்றும் ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசின் பங்களிப்பு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு, ஒருவருக்கான மாதச் செலவு ரூ.35,548 என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மின்வாரியத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. மின் வாரியத்தில் விரைவில் 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து இருப்பதால், மின்வாரியப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர். விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, காலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
France's mounting debt crisis raises risk of fresh Eurozone turmoil
அடுத்த செய்தி
BOJ keeps policy rate unchanged at 1.25%

தொடர்புடைய செய்திகள்