Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விளையாட்டு வீரர்களை கவுரவித்த முதல்வர் விஜய்

விளையாட்டு வீரர்களை கவுரவித்த முதல்வர் விஜய்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கிய முதல்வர் விஜய்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பகிரவும் WhatsApp Facebook

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் முதல்வர் கோப்பைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ச.ஜோசப் விஜய் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். 

அதைத் தொடர்ந்து, முதல்வர் கோப்பைக்கான நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் ரூ.42.90 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமி, சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

உதவித்தொகைத் திட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகள், சிறப்புநிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.500, முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.



முந்தைய செய்தி
Samsung posts record profit on AI chip demand
அடுத்த செய்தி
Alphabet revenue jumps 25% to USD 127.6 bn on cloud growth

தொடர்புடைய செய்திகள்