Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2 அமைச்சர்களால் காங்., திருப்தி அயடைவில்லை: அமைச்சர் ராஜேஸ்குமார்

2 அமைச்சர்களால் காங்., திருப்தி அயடைவில்லை: அமைச்சர் ராஜேஸ்குமார்

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம் என அவர் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டதற்காக காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்து விடவில்லை என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக, நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை.

ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும், ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவெக - காங்கிரஸ் இடையே எந்த கருத்து மோதலும் இல்லை.

லஞ்சம், ஊழல் இல்லாத அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் எங்களது பணி. சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனப் பொதுவாக அரசின் மீது குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல.

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் கிடையாது என முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.200 கோடி மதிப்பில் மகாபலிபுரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
CTI urges Rahul to defer Nov 1 INDIA bloc rally, warns of Rs 10,000 crore trade loss
அடுத்த செய்தி
Minister inaugurates Rs.1.75 crore Sub-Registrar office

தொடர்புடைய செய்திகள்