Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.100 கோடி ஊழல் வழக்கு - திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

ரூ.100 கோடி ஊழல் வழக்கு - திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரையில் வசூலித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ.100 கோடி வரை ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

முந்தைய திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரையில் வசூலித்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

அப்போது, காவல் துறை தரப்பில், "அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இது ஒரு நிதி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு. ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கினால் உண்மைகள் எதுவும் வெளிவராது. மேலும், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று வாதிடப்பட்டது.

அன்பில் மகேஷ் தரப்பில் "விசாரணைக்காக ஒரு நாள் முழுவதும் ஆஜராகி, முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்" என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்திருந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டில் இன்று கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக கடந்த செப். 16-ம் தேதி அன்பில் மகேஷுக்குச் சொந்தமான இடங்களில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
ஆதித்ய பிர்லா ரியல் எஸ்டேட் லாபம் ரூ.918.70 கோடி
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 483 புள்ளிகள் உயர்வு

தொடர்புடைய செய்திகள்