Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஷிப்ட் முறையை கொண்டு வாங்க! - போர்க்கொடி தூக்கும் அரசு மருத்துவர்கள்

ஷிப்ட் முறையை கொண்டு வாங்க! - போர்க்கொடி தூக்கும் அரசு மருத்துவர்கள்
தமிழ்நாடு அரசு

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தொடர்ந்து 24 மணி நேரம் பணியாற்றும் நடைமுறையை மாற்றி, சுழற்சி முறையிலான பணியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தொடர்ந்து 24 மணி நேரம் பணியாற்றும் நடைமுறையை மாற்றி, சுழற்சி முறையிலான பணியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் கட்சியினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் ஓய்வில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
"24 மணி நேர பணியில் இருக்கும் மருத்துவர்கள் நோயாளிகள் இல்லாத நேரத்தில் பணியறையில் ஓய்வு எடுப்பது இயல்பான நடைமுறை. அவசர நோயாளிகள் வந்தால் செவிலியர்கள் அல்லது மருத்துவமனை பணியாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து சிகிச்சை அளிப்பார்" என அரசு மருத்துவர்கள் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்கம் கூறுகையில், "அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 24 மணி நேர பணி முறையை மாற்றி, சுழற்சி அடிப்படையில் பணியாற்றும் ஷிப்ட் முறையை கொண்டு வர வேண்டும். 24 மணி நேர பணிமுறையால் நீண்ட நேரம் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுவதுடன், மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை" என கூறப்பட்டுள்ளது.
 
இதனிடையே, தமிழக மருத்துவ அலுவலர்கள் சங்கமும் அரசு மருத்துவப் பணியாளர்களை இரவு நேரங்களில் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடர்ந்தால் போராட்டம் மற்றும் பணிப் புறக்கணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்று மருத்துவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
 
முந்தைய செய்தி
அக். 15-க்குள்... அரசு பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு
அடுத்த செய்தி
கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

தொடர்புடைய செய்திகள்