Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெளிப்படையான நிர்வாகம் எங்கே? உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது - உதயநிதி

வெளிப்படையான நிர்வாகம் எங்கே? உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது - உதயநிதி

வெளிப்படையான நிர்வாகத்தை தருவேன் என தெரிவித்த முதல்வர், தன்னுடைய ஆலோசகர் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன்?

பகிரவும் WhatsApp Facebook

வெளிப்படையான நிர்வாகத்தை தருவேன் என தெரிவித்த முதல்வர், தன்னுடைய ஆலோசகர் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் மத்தியில் பொய் செய்திகள் பரவுவதை தடுக்க, திமுக ஆட்சியின்போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான, சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு தகவல் சரிபார்ப்பகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
தவெக ஆட்சியில் இந்த அமைப்பில் யார், யார் பொறுப்பில் உள்ளனர், இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன, இது தொடர்பான அரசாணை எப்போது வெளியிடப்பட்டது என அரசிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்டது. இதற்கு, தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என அரசு பதில் அளித்துள்ளது.

வெளிப்படையான நிர்வாகத்தை தருவேன் என தெரிவித்த முதல்வர், தன்னுடைய ஆலோசகர் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன்? தகுதியற்றவர்களுக்கு அந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?

உண்மை எது – பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல. உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
இலவச வேட்டி, சேலை உற்பத்திக் கூலி உயர்வு: அரசுக்கு ரூ.13.66 கோடி கூடுதல் செலவு
அடுத்த செய்தி
India, Canada sign commercial pacts

தொடர்புடைய செய்திகள்