Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அயோடின் இல்லாத உப்பு விற்பனை: அமைச்சர் எச்சரிக்கை

அயோடின் இல்லாத உப்பு விற்பனை: அமைச்சர் எச்சரிக்கை

மனித பயன்பாட்டுக்கு அயோடின் இல்லாத உப்பை விற்பனை செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையால், ஆய்வுகள் செய்யப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்ஐஇடி கல்லூரியில், உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர்கள் அருண்ராஜ், வெங்கட்ரமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இருவரும் அயோடின் குறைபாடுகள் தடுப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றிய சுகாதார அலுவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, துறை சார்ந்த உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: 

மனித பயன்பாட்டுக்கு அயோடின் இல்லாத உப்பை விற்பனை செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையால், ஆய்வுகள் செய்யப்படுகிறது. விதிகளுக்குப் புறம்பாக அயோடின் அற்ற உப்பை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்பனை செய்த வணிகர்களிடமிருந்து இதுவரை ரூ.1 கோடியே 39 லட்சத்து 68 ஆயிரத்து 950 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை அல்லது பதப்படுத்தும் பயன்பாட்டுக்கான உப்பை சமையல் பயன்பாட்டிற்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கழுத்துக் கழலை பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கவனம் செலுத்தப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்பட்டு டெங்கு, வயிற்றுப்போக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கத் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் ஏற்கனவே உள்ளவைதான் ஊழியர்கள் தங்களின் நியாயமான ஊதிய உயர்வு, பணி நிரந்தரக் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கோ அரசிடம் முறையிடுவதற்கோ எந்த தடையும் இல்லை இவ்வாறு அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.

முந்தைய செய்தி
Australia expands biometric requirements for visa applicants in India
அடுத்த செய்தி
SpaceX raised $40 bn in debt, says Musk

தொடர்புடைய செய்திகள்