Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சரவெடியாய் வெடிக்கப்போகும் பட்டாசுகள்: ஊதுபத்தி தயாரிப்பு மும்முரம்!

சரவெடியாய் வெடிக்கப்போகும் பட்டாசுகள்: ஊதுபத்தி தயாரிப்பு மும்முரம்!
ஈரோட்டில் பட்டாசுகளை வெடிக்கப் பயன்படுத்தும் ஊதுபத்திகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்/ படம்: ஆர்.ரவிச்சந்திரன்

பண்டிகைக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பே தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்கப் பயன்படுத்தும் ஊதுபத்திகளைத் தயாரிக்கும் பணி ஈரோடு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பண்டிகைக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பே தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டாசுகளை வெடிக்கப் பயன்படுத்தும் நீளமான ஊதுபத்திகள் ஈரோட்டில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் தயாரிக்கும் சாதிக் பாட்ஷா கூறியதாவது: தென்னங்குச்சிகளை வெட்டி, காய வைத்து, தேவையான அளவுக்குப் பதப்படுத்தி, கரித்தூள் உள்ளிட்ட பொருட்கள் கலந்து ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன. கருப்பு நிறம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த குடிசைத் தொழில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல நிலையில் இருந்தது. ஆனால், தற்போது ஏராளமானோர் இதே தொழிலில் ஈடுபடுவதால், வருமானம் குறைந்துள்ளது. முன்பு ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் வரை விற்பனை நடைபெற்றது. தற்போது ரூ.1 லட்சம் விற்பனை நடப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி காலத்தில் சிந்தாமணி மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பட்டாசுகள் விற்கப்படும்போது, ஊதுபத்திகளையும் அரசு கொள்முதல் செய்து, விற்பனை செய்ய வேண்டும் என ஊதுபத்தி தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் பாரம்பரியத் தொழில் மேம்படும் என்றும், அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


முந்தைய செய்தி
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி
அடுத்த செய்தி
இனி இங்கெல்லாம் விமான சேவை ‘கட்’ - முக்கிய மாற்றங்களை கொண்டு வந்த சேலம் ஏர்போர்ட்

தொடர்புடைய செய்திகள்