Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.112.95 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

ரூ.112.95 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் அமைச்சர் ரமேஷ்.

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 999 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 16,657.69 ஏக்கர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அவற்றில் 12,373 எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ.112.95 கோடி மதிப்புடைய 105.14 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அவர் பேசியதாவது: 

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றங்களில் 999 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 16,657.69 ஏக்கர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அவற்றில் 12,373 எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு வழக்குகளை விரைந்து முடித்து, கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளுதல், சேதமடைந்த கோயில்களைப் புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான 596 பணிகளில் 302 பணிகளுக்கு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 294 மதிப்பீடுகளுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும்.

மேலும், அறநிலையத் துறை துறை மூலம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள 108 ஆன்மிக நூல்களில் 51 நூல்கள் தயாராக உள்ளன.தவெக அரசு பொறுப்பேற்றது முதல், கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகளிலிருந்து ரூ.198.25 கோடி நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 

வாடகைதாரர்களுக்கு நிலுவை விவரங்களை முறையாகத் தெரிவிப்பது, தொகை செலுத்தியவுடன் ரசீது வழங்குவது, செலுத்தப்பட்ட தொகைகளைக் கணக்கில் கொண்டு மீதமுள்ள நிலுவையைத் துல்லியமாகப் பராமரிப்பது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்றுதல், பக்தர்களின் குறைகளைத் தீர்த்தல், கிராமத் தெய்வக் கலை விழாக்களை நடத்துதல் மற்றும் நீதிமன்ற வழக்குகளைக் கண்காணித்தல் ஆகிய பணிகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
African buyers see strong demand for Indian rice despite higher prices
அடுத்த செய்தி
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 16.1 சதவீதம் சரிவு

தொடர்புடைய செய்திகள்