Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மருந்துகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால்... தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

மருந்துகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால்... தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநரும் உரிம அதிகாரியுமான எஸ்.குருபாரதி அனைத்து மண்டல உதவி இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் மருத்துவமனைகள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தள்ளுபடி விலையில் வாங்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்களை உள்நோயாளிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநரும் உரிம அதிகாரியுமான எஸ்.குருபாரதி அனைத்து மண்டல உதவி இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


அதில் கூறியுள்ளதாவது:

குறிப்பிட்ட மருத்துவமனைகள் மற்றும் அங்குள்ள சில்லறை மருந்தகங்களில் மருந்து ஆய்வாளர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட விலைப்பட்டியல், கொள்முதல் விலை, அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட விற்பனை ரசீதுகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

குறிப்பாக, அதிக விலையுள்ள உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகளின் இருப்புப் பதிவேடுகளை கண்காணிக்க வேண்டும். இதில் ஏதேனும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, ஆவணங்களில் குளறுபடி அல்லது விலைக் கட்டுப்பாட்டு விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், 2013-ஆம் ஆண்டின் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் விவரங்களை இயக்குநரகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




முந்தைய செய்தி
பரவும் எபோலா - சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் மக்கள்
அடுத்த செய்தி
Samsung to pay special bonus to semiconductor staff in 2027

தொடர்புடைய செய்திகள்