Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடையா? - மின்சார வாரியம் விளக்கம்

தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடையா? - மின்சார வாரியம் விளக்கம்
மின்சார வாரியம் விளக்கம்

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, மாதாந்திர பராமரிப்புப் பணி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை செய்யப்பட உள்ளதாகப் பரவிய செய்தியை தமிழ்நாடு மின்வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook


இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலத்தில் 8 மணி நேர மின்தடைக்கு எந்தத் திட்டமும் இல்லை. மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்கான மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடைபெறும். சமீபத்தில் சில பகுதிகளில் ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்தடைகளுக்கு காற்றாலை மின் உற்பத்தி சரிவு, திடீர் மின்தேவை அதிகரிப்பு மற்றும் நிலத்தடி கேபிள் பழுதுகளே முக்கியக் காரணங்களாகும். மின்மாற்றிகளைப் பழுதுபார்த்தல், மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் எதிர்காலத்தில் பெரிய பழுதுகள் இன்றி தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், மின்தடை தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா உதவி எண் 1912 அல்லது மின்னகம் எண் 94987 94987-ஐத் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
முந்தைய செய்தி
இந்தியாவில் நவீன நீர்மூழ்கிக் கப்பல்: கடற்படையை வலுப்படுத்த ரூ.80 ஆயிரம் கோடியில் திட்டம்
அடுத்த செய்தி
பெருமழை பாதிப்புக்கு ‘குட் பை’ - வருகிறது ‘ரெயின் சென்னை’ ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்