Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்வதேச விஞ்ஞானிகள் தரவரிசையில் இடம்பிடித்த திருச்சி பேராசிரியர்கள்

சர்வதேச விஞ்ஞானிகள் தரவரிசையில் இடம்பிடித்த திருச்சி பேராசிரியர்கள்

இணை ஆசிரியர் பங்களிப்பு, ஆராய்ச்சித் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமும், எல்சேவியர் நிறுவனமும் இணைந்து சர்வதேச விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. 

அதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் எம். லட்சுமணன், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் என்.தாஜுதீன், வேதியியல் துறை பேராசிரியர் எம்.பழனியாண்டவர், தாவரவியல் துறை பேராசிரியர் எம்.சத்தியபாமா, கடல்சார் அறிவியல் துறை பேராசிரியர் ஆர்.ராஜாராம், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் டி.சி.சபரி கிரிசன், உயிர்த்தகவலியல் துறை பேராசிரியர் பி.செல்லப்பாண்டி ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


பல்வேறு அறிவியல் துறைகளில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கிடைத்த மேற்கோள்கள், இணை ஆசிரியர் பங்களிப்பு, ஆராய்ச்சித் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பேராசிரியர்கள் எம்.லட்சுமணன், என்.தாஜுதீன், எம்.பழனியாண்டவர், எம்.சத்தியபாமா ஆகியோர் ஓய்வுபெற்றவர்கள். 


இவர்களுக்கு கீழ் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் 2025 வரை ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டதன் காரணமாகவும் பல்கலைக்கழகத்தின் கீழ் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
South Yorkshire eyes Indian investment in advanced manufacturing
அடுத்த செய்தி
Nearly half of india’s bank branches sit across just six states, ClarityX report finds

தொடர்புடைய செய்திகள்