Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வரலாறு காணாத மின்தேவை: தமிழகத்தில் விரைவில் நீண்டகால மின் கொள்முதல் டெண்டர்

வரலாறு காணாத மின்தேவை: தமிழகத்தில் விரைவில் நீண்டகால மின் கொள்முதல் டெண்டர்
மின் வாரியம்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையைச் சமாளிக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும், தமிழ்நாடு அரசு நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வரலாறு காணாத மின்தேவை அதிகரித்துள்ளது. வீடுகள், தொழில்துறை அதீத வளர்ச்சி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் மின்சார தேவை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.


சமீபத்தில் மாநிலத்தின் உச்சபட்ச மின்தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டி புதிய சாதனை படைத்தது. மறுபுறம், காற்றாலை மின் உற்பத்தி சில பருவங்களில் குறைவதும், சூரிய ஒளி மின்சாரம் பகல் நேரங்களில் மட்டுமே கிடைப்பதாலும் மாலை, இரவு நேரங்களில் மின் விநியோகம் பெரும் சவாலாக மாறியுள்ளது.

பழைய நீண்டகால ஒப்பந்தங்கள் பல காலாவதியாகும் நிலையில் இருப்பதும், புதிய மின்திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்களும், சில அலகுகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் மின்சார வாரியத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறுகியகால கொள்முதலால் அதிகரிக்கும் நிதிச்சுமை மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, அரசு குறுகியகால சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சில நேரங்களில் ஒரு யூனிட் மின்சாரம் ₹20 அல்லது அதற்கும் மேலாக வாங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மாநில மின்சார விநியோக நிறுவனத்திற்குப் பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. இந்த நிதிச்சுமையைத் தவிர்க்கவே தற்போது நீண்டகால கொள்முதல் முறைக்கு அரசு மாறுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர்கள் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


இந்த புதிய நீண்டகால ஒப்பந்தத்தால் கிடைக்கும் நன்மைகள்:

◦ பொதுமக்கள் மற்றும் தொழில்துறைக்கு 24 மணி நேரமும் தடையில்லா விநியோகம் உறுதி செய்யப்படும்.
◦ மின்கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
◦ குறுகியகால சந்தையில் ஏற்படும் திடீர் விலை ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க முடியும்.
◦ நிலையான விலையில் தடையின்றித் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தங்களை வெளிப்படையான போட்டி டெண்டர் முறையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மலிவான மற்றும் நம்பகமான விநியோகஸ்தர்களைத் தேர்வு செய்ய முடியும்.

விரிவான திட்டங்கள் மற்றும் புதிய இலக்குகள் நீண்டகால மின்கொள்முதலுடன் சேர்த்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், குறிப்பாகச் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புக்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க உள்ளது.எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை 2030-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் மின்தேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நீண்டகால மின் கொள்முதல் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்கள் தமிழ்நாட்டின் மின்சாரத் துறையில் ஒரு மைல்கல்லாக அமையும்.

முந்தைய செய்தி
விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்க - அரசுக்கு கோரிக்கை
அடுத்த செய்தி
இரண்டு மாதங்களில் 57% வரை சரிந்த பென்னி பங்குகள்

தொடர்புடைய செய்திகள்