Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆவின் பால் உபபொருட்கள் விலை உயர்வு - முழு விவரம்

ஆவின் பால் உபபொருட்கள் விலை உயர்வு - முழு விவரம்

உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆவின் நெய், வெண்ணெய், ரசகுல்லா, குலாப் ஜாமுன், மைசூர்பாக், லஸ்ஸி உள்ளிட்ட பால் உபபொருட்களின் விலைகள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில் ஆவின் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதையும், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் பொருட்களின் விலைகளையும் ஒப்பிட்டு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய வருவாய் கிடைப்பதையும், கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஆவின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்திச் செலவுகளின் உயர்வு காரணமாக பால் உபபொருட்களின் விலைகளை மறுஆய்வு செய்துள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது.

விலை உயர்வின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை உயர்வுக்குப் பிறகும், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு நிறுவனங்களின் ஒத்த தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது ஆவின் பொருட்களின் விலை குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ஆவின் பொருட்களின் புதிய விலைகள்

பொருள்|                                    பழைய விலை|                 புதிய விலை|                உயர்வு

நெய்(100 கிராம்)|                             ரூ.85|                                   ரூ.95|                          ரூ.10

வெண்ணெய் (100 கிராம்)|            ரூ.60|                                   ரூ.70|                          ரூ.10

ரசகுல்லா (100 கிராம்)|                   ரூ.45|                                   ரூ.50|                           ரூ.5

குலாப் ஜாமுன் (250 கிராம்)|        ரூ.100|                                 ரூ.115|                          ரூ.15

மைசூர்பாக் (250 கிராம்)|              ரூ.140|                                 ரூ.160|                          ரூ.20

லஸ்ஸி (200 மி.லி.)|                           ரூ.20|                                   ரூ.23|                            ரூ.3




தயிர், மோர், குக்கீஸ் விலை

500 மில்லி லிட்டர் தயிர் ரூ.40, ஒரு கிலோ சாதாரண தயிர் ரூ.70, பிரீமியம் தயிர் ஒரு கிலோ ரூ.130 என விலை நிர்ணயம். 200 மில்லி லிட்டர் மோர் ரூ.10, பாட்டில் மோர் ரூ.14, மில்க் ஷேக் ரூ.35.
என புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டர், கஸ்டர்டு, தேங்காய், சாக்லேட் சிப்ஸ், உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காத ஓட்ஸ் குக்கீஸ் வகைகள் 80 கிராம் விலை ரூ.40. பட்டர் முறுக்கு 200 கிராம் ரூ.95, மிக்சர் ரூ.110 என விலை நிர்ணயம்.
முந்தைய செய்தி
Risks spelled out for Anthropic investors include possible harms from runaway AI
அடுத்த செய்தி
India-EU investment protection agreement under discussion: Goyal

தொடர்புடைய செய்திகள்