Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆசிய தலைமையகத்தை ஹைதராபாத்துக்கு மாற்றும் அகிலிசியம்: 500 மில்லியன் டாலர் வருவாய் இலக்கு

ஆசிய தலைமையகத்தை ஹைதராபாத்துக்கு மாற்றும் அகிலிசியம்: 500 மில்லியன் டாலர் வருவாய் இலக்கு

2018-ம் ஆண்டு உயிரியல் அறிவியல் துறையில் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம், மருந்துக் கண்டுபிடிப்பு, மருத்துவப் பரிசோதனைகள், உற்பத்தி உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது

பகிரவும் WhatsApp Facebook

உயிரியல் அறிவியல் துறையில் சேவைகளை வழங்கும் அகிலிசியம் நிறுவனம், தனது ஆசியத் தலைமையகத்தை சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 500 மில்லியன் டாலர் வருவாயை எட்டவும், பணியாளர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.


மருந்துத் தயாரிப்பு, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஹைதராபாத் கொண்டுள்ள வலுவான கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் ஆகியவை இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாகும். சென்னை, புனே நகரங்களிலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடரும்.

2018-ம் ஆண்டு உயிரியல் அறிவியல் துறையில் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம், மருந்துக் கண்டுபிடிப்பு, மருத்துவப் பரிசோதனைகள், உற்பத்தி உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. 2026-ம் ஆண்டின் இறுதியில் 72 முதல் 75 மில்லியன் டாலர் வருவாயை எட்டும் என எதிர்பார்க்கும் நிறுவனம், 2027-ம் ஆண்டில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஆண்டு வருவாயைப் பெற இலக்கு வைத்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் மற்றும் புதிய தீர்வுகளை உருவாக்க புத்தாக்க ஆய்வகங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத் விரிவாக்கத்தின் மூலம் உலகளாவிய மருந்து, உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சேவைகளை அதிகரித்து, சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


முந்தைய செய்தி
4% உயர்வுடன் அறிமுகமான பாரஸ் ஹெல்த்கேர் பங்குகள்
அடுத்த செய்தி
PVR INOX லாபம் 2மடங்குக்கு மேல் உயர்வு!

தொடர்புடைய செய்திகள்