Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னை, திருச்சி - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை குறைப்பு

சென்னை, திருச்சி - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை குறைப்பு

வாரந்தோறும் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 23-லிருந்து 19-ஆகக் குறைக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், 2026–27 குளிர்கால விமான அட்டவணையில் நாடு முழுவதும் புதிய சர்வதேச வழித்தடங்களை அறிவித்துள்ளது. எனினும், திருச்சி மற்றும் சென்னையில் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட பல சர்வதேச விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிடாதது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, கடந்த 2025–26 குளிர்கால அட்டவணையில் திருச்சியிலிருந்து குவைத், தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், தோஹா மற்றும் சிங்கப்பூர் வழித்தடங்களிலும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வாரந்தோறும் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 23-லிருந்து 19-ஆகக் குறைக்கப்பட்டது.

குளிர்கால அட்டவணையில் 30% அதிகரிப்பு

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2026 கோடைக்காலத்தில் வாரந்தோறும் சுமார் 3,150 விமானங்களை இயக்கிய நிலையில், புதிய குளிர்கால அட்டவணையில் இந்த எண்ணிக்கையை சுமார் 4,100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது சுமார் 30 சதவீத அதிகரிப்பாகும். ஆனால், இந்தப் பட்டியலில் திருச்சியிலிருந்து புதிய சர்வதேச வழித்தடங்கள் இடம்பெறவில்லை.

குறிப்பாக, 2025 ஆகஸ்ட் இறுதியில் திருச்சி–குவைத், செப்டம்பரில் திருச்சி–தம்மாம் சேவைகள் நிறுத்தப்பட்டன. அக்டோபர் இறுதியில் தோஹா வழித்தடத்தில் வாராந்திர சேவை குறைக்கப்பட்டது. சிங்கப்பூர் வழித்தடத்திலும் வாரத்திற்கு 14-ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை 11-ஆகக் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே, நடப்பாண்டு கோடை காலத்தில் திருச்சி–ஷார்ஜா சேவை மீண்டும் தொடங்கப்பட்டதுடன், துபாய் வழித்தடத்திலும் கூடுதல் சேவைகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், குவைத், தம்மாம் போன்ற முக்கிய வழித்தடங்கள் மீண்டும் தொடங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

சென்னையிலும் ரத்து

இதேபோன்று, சென்னையிலிருந்து குவைத், தம்மாம், மஸ்கட் ஆகிய வழித்தடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 2025ம் ஆண்டு செப்டம்பரில் விமான சேவைகளை நிறுத்தியது. தற்போது அக்டோபர் 25 முதல் சென்னை–சிங்கப்பூர் வழித்தடத்தில் வாரத்திற்கு 14 விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், சென்னை–குவைத், துபாய், ஷார்ஜா, மஸ்கட், தம்மாம், கோலாலம்பூர், கொழும்பு உள்ளிட்ட வழித்தடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


முந்தைய செய்தி
Two killed in road accident
அடுத்த செய்தி
Govt to bankroll half the cost of deepwater wells

தொடர்புடைய செய்திகள்