Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விமான கட்டணம் திடீர் உயர்வு - எவ்வளவு பாருங்க..

விமான கட்டணம் திடீர் உயர்வு - எவ்வளவு பாருங்க..

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் விமான எரிபொருள் விலை அதிகரிப்பை காரணம் காட்டி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. 

இந்த புதிய கட்டண உயர்வு உடனடியாக வந்துள்ளது. இன்று முதல் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கும் கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட பழைய முன்பதிவுகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தாது.

உள்நாட்டு விமானங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.400-லிருந்து, அதிகபட்சமாக ரூ.1,200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. 


மேலும், மேற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 55 அமெரிக்க டாலர், ஐரோப்பிய நாடுகளுக்கு 135 டாலர், ஆஸ்திரேலியாவுக்கு 210 டாலர், வட அமெரிக்காவுக்கு 215 டாலர் உயர்த்தப்பட்டுள்ளது. 

பண்டிகைக் காலங்கள் நெருங்கிவரும் வேளையில் இந்த திடீர் கட்டண உயர்வு விமானப் பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முந்தைய செய்தி
எகிறிய தக்காளி, வெங்காயம் விலை - மக்கள் கலக்கம்
அடுத்த செய்தி
Samsung Q3 profit jumps 783% to record $80 bn

தொடர்புடைய செய்திகள்