Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டோல்கேட்டை கடக்க உள்ளூர் மக்களுக்கு பாஸ்: மத்திய அரசு அறிமுகம்

டோல்கேட்டை கடக்க உள்ளூர் மக்களுக்கு பாஸ்: மத்திய அரசு அறிமுகம்

பயனர் கட்டண வசூல் முறையின் அடிப்படையில், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச்சாலைகளில் இந்த உள்ளூர் பயண அட்டை கிடைக்காது.

பகிரவும் WhatsApp Facebook

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு (டோல்கேட்) அருகில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிதாக்க சுங்கச் சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் தகுதியுள்ள வணிகப் பயன்பாடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு உள்ளூர் பயணச் சலுகை (பாஸ்) அட்டையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நடைமுறை வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இந்த உள்ளூர் பயண அட்டைக்கான ஆண்டு கட்டணம், நகராட்சி அல்லது உள்ளூர் நகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள சுங்கச் சாவடிகளுக்கு ரூ.1,500 ஆகவும், இந்த எல்லைகளுக்குள் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளுக்கு ரூ.3,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறையின்படி, சுங்கச் சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும், செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் வில்லையை வைத்திருக்கும் வணிகப் பயன்பாடு இல்லாத வாகன உரிமையாளர்கள், குறிப்பிட்ட சுங்கச் சாவடி வழியாகப் பயணிக்க, ஏற்கெனவே உள்ள மாதாந்திர பயண அட்டை அல்லது புதிய சலுகை உள்ளூர் பயண அட்டை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த பயண அட்டை குறிப்பிட்ட சுங்கச் சாவடிக்கு மட்டுமே செல்லும். வேறு சுங்கச் சாவடிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியாது.

பயனர் கட்டண வசூல் முறையின் அடிப்படையில், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச்சாலைகளில் இந்த உள்ளூர் பயண அட்டை கிடைக்காது. மேலும், பயணிகள் பயன்படுத்துவதற்குச் சேவைச் சாலை அல்லது மாற்றுச் சாலை உள்ள இடங்களிலும் இந்த அட்டை வழங்கப்படாது.

தகுதியுள்ள சுங்கச் சாவடிகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் இந்தப் பயண அட்டையைப் பெறலாம். டிசம்பர் 1-ம் தேதி முதல் ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலமாகவும் அட்டையைப் பெறலாம்.
முந்தைய செய்தி
PVR INOX லாபம் 2மடங்குக்கு மேல் உயர்வு!
அடுத்த செய்தி
AI-க்கான தேவை தொடர்ந்து அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்