Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எஸ்பிஆர் சிட்டியில் 48 அடி பிரமாண்ட கொலு

எஸ்பிஆர் சிட்டியில் 48 அடி பிரமாண்ட கொலு

பெரம்பூரில் உள்ள எஸ்பிஆர் சிட்டி-யில் 48.1அடி உயரத்தில் பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெரம்பூரில் உள்ள எஸ்பிஆர் சிட்டி-யில் 48.1அடி உயரத்தில் பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான கொலு என்ற சாதனையைப் படைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலுவில், 3,500-க்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

அக்.11-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கொலு, அக்.20-ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. எஸ்பிஆர் சிட்டி -யின் 47 தளங்களைக் கொண்ட குடியிருப்புக் கட்டடத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலுவில், பாரம்பரிய பொம்மைகள், புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு உருவங்கள் இடம்பெற்றுள்ளன. லண்டனைச் சேர்ந்த வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்புடன் இணைந்து இந்தச் சாதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

5 லட்சம் பேரை ஈர்க்க இலக்கு

கொலுவை அமைக்கும் பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டனர்.

இந்தக் கொலு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் பொதுமக்களை ஈர்ப்பதும், நவராத்திரி கொண்டாட்டத்தைப் பரவலாகக் கொண்டு செல்வதுமாக உள்ளது. 

முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு 5 லட்சம் பார்வையாளர்களை ஈர்ப்பது நிர்வாகத்தின் இலக்காக உள்ளது. எதிர்பார்க்கப்படும் பார்வையாளர்களின் வருகை, நிகழ்ச்சியின் வரவேற்பை மதிப்பிடுவதற்கான முக்கிய அளவுகோலாக இருக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Data quality, harmonisation key to policy, AI-driven growth
அடுத்த செய்தி
மக்காச்சோள விலை சற்று குறைந்தது

தொடர்புடைய செய்திகள்