Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம் - மீறினால் என்ன செய்யலாம்?

பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம் - மீறினால் என்ன செய்யலாம்?

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2025 மே 1 முதல் 2026 பிப்.28 வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்தது.


 ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடியும், ரூ. 75,000 முதல் ரூ. 1,00,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ. 75,000 வரையிலும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 வரை தள்ளுபடியும் செய்யப்பட்டது. எனினும் மீதமுள்ளவர்களிடம் பயிர்க்கடன் வசூலிக்கும் நடைமுறை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;


கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சில விவசாயிகளிடருந்து நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க தொலைபேசி வாயிலாக முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான 98840 00845 (வாட்ஸ் அப்) எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
காதி கிராப்ட்டில் 30 சதவீதம் தள்ளுபடி - பாடி வாஷ் அறிமுகம்!
அடுத்த செய்தி
பூரண மதுவிலக்கு: நிரந்தர பணி வேண்டும் - மாநாட்டில் தீர்மானம்

தொடர்புடைய செய்திகள்