Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இதை மட்டும் செய்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம் - சி.வி.சண்முகம்

இதை மட்டும் செய்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம் - சி.வி.சண்முகம்

அதிமுக மூன்றாமிடம் பெற்ற நிலையில், அதிருப்தியாளர்கள் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

அதிமுகவிற்கு புத்துயிர் கொடுத்து வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தால், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அணியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிருப்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்தக் கோரிக்கைகளை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, 20-க்கும் மேற்பட்டவர்களின் மாவட்டச் செயலாளர்கள் பதவியை பறித்தார். தற்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாமிடம் பெற்ற நிலையில், அதிருப்தியாளர்கள் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனது அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் மீது நான் அதிருப்தியில் இருக்கிறேன். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். சமீபத்திய இடைத் தேர்தல்களில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இதை அதிமுக தலைமை கூர்ந்து கவனித்து, ஆலோசனை செய்ய வேண்டும்.


தோல்விக்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகண்டு, கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு தேவை ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் கொடுத்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம். இது மிகவும் முக்கியமானது.
கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட வேண்டும். தற்போது நான் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. எனவே, பொறுப்பில் இருப்பவர்கள், இதுகுறித்து அனைவருடனும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அனைவரையும் அரவணைத்துச் சென்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவை மீண்டும் கொண்டு வரலாம்.


மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இது நல்ல மாற்றம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



முந்தைய செய்தி
மக்களே ரெடியா இருங்க.. மிக கனமழை பெய்ய வாய்ப்பு!
அடுத்த செய்தி
Jio Platforms ஐபிஓ அக். 21-ம் தேதி தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்