Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம்

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம்

நவ.1 முதல் ரூ.1000-க்கு மேல் ரொக்கம் பெறத் தடை

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதைத் தடுக்கவும், பணப் பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட உள்ளது.


தமிழகம் முழுவதும் 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் தோறும் பல கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதன்படி, வருகின்ற நவம்பர் 1-ம் தேதி முதல் நுகர்வோர் ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால், அதற்கான தொகையை யு.பி.ஐ அல்லது டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
ரொக்கப் பணம் ஏற்கப்பட மாட்டாது.

இதே நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.500-க்கு மேற்பட்ட விற்பனைக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதாவது, ரூ.500-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயமாகும். இந்த வரம்புகளுக்கு கீழ் உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் ரொக்கமாகவோ அல்லது மின்னணு முறையிலோ செலுத்திக் கொள்ளலாம். டாஸ்மாக் கடைகளில் தினமும் வசூலாகும் பெருந்தொகையைப் பாதுகாப்பதிலும், அதனை வங்கிகளில் கொண்டு செலுத்துவதிலும் பணியாளர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ரொக்கப் பரிவர்த்தனையில் இதற்கான சான்றுகள் இல்லாததால், புகாரை விசாரிப்பது கடினமாக இருந்தது. புதிய நடைமுறையின் மூலம் விற்பனைத் தொகை நேரடியாக டாஸ்மாக் கழகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், கூடுதல் விலை வசூலிப்பது முற்றிலும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் டாஸ்மாக் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பி.ஓ.எஸ் இயந்திரங்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தங்களது சொந்த க்யூ.ஆர் குறியீட்டையோ அல்லது தனிப்பட்ட வங்கிக் கணக்கையோ பயன்படுத்திப் பணம் பெற்றால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



முந்தைய செய்தி
India adds 6.57 million mobile subscribers in September: TRAI
அடுத்த செய்தி
சன்டெக் ரியால்டி Q2 லாபம் 17% உயர்வு

தொடர்புடைய செய்திகள்