Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏற்காட்டுக்கு சுற்றுலா வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்

ஏற்காட்டுக்கு சுற்றுலா வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்

சுற்றுலா பயணிகள் யாரும் ஏற்காட்டுக்கு சுற்றுலா வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலைப்பாதைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் யாரும் ஏற்காட்டுக்கு சுற்றுலா வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.


வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஏற்காடு வருவதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் பொதுமக்களும் மழை பெய்யும் நேரங்களில் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழைக்கால ஆபத்துகளைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

முந்தைய செய்தி
Emerging sector investments outpace bank, NBFC lending
அடுத்த செய்தி
NMDC scouts for mining assets across four continents

தொடர்புடைய செய்திகள்