Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆந்திராவுக்கு மாறிய ரூ.1614 கோடி கொரிய முதலீடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆந்திராவுக்கு மாறிய ரூ.1614 கோடி கொரிய முதலீடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதலீடுகள், அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கொரிய நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி முதலீடு, தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில், தேசிய சராசரிக்கும் கீழே தவெக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள், அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுள்ளது.


அனைத்து துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். 

இதெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதல்வர், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ஷோ காட்டக் கிளம்பிவிட்டார். கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள். தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
OpenAI seeks Samsung, SK amid chip shortage
அடுத்த செய்தி
US struck Iran to prevent it from acquiring nuclear weapons, says Trump

தொடர்புடைய செய்திகள்