Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்சியில் ரூ.2.26 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சியில் ரூ.2.26 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் ஒருபகுதி

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த தம்பதியிடம் இருந்து ரூ.2.26 கோடி மதிப்பிலான 1.6 கிலோ தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு (ஏ.ஐ.யு.) சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் வந்த தம்பதியினரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள், இருவரிடமும் சோதனை மேற்கொண்டனர். 


 அப்போது, அவர்கள் அணிந்திருந்த உள்ளாடைகளிலும், கைப்பையிலும் மறைத்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களிடமிருந்து மொத்தம் 1.6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2.26 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தங்கத்தைக் கடத்தியதாக கூறப்படும் தம்பதியினரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 460 புள்ளிகள் சரிவு
அடுத்த செய்தி
கப்பல் நிறுவன பங்குகளை விற்க கோல்ட்மேன் சாக்ஸ் பரிந்துரை

தொடர்புடைய செய்திகள்