Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆம்பூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஆம்பூரில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கமல் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு அனுமதியின்றி பட்டாசு ரகங்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றப் புலனாய்வு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 100 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 


இதையடுத்து, அவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக சீனிவாசன் என்பவர் மீது வழக்கு செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி
கடல் கண்ணிவெடியில் சிக்கி 4 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடிப்பு
அடுத்த செய்தி
திருச்சிக்கு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

தொடர்புடைய செய்திகள்