Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

50,000 இலவச விவசாய மின் இணைப்பு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

50,000 இலவச விவசாய மின் இணைப்பு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

இந்த அறிவிப்பை செயல்படுத்த எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 2026-2027 ஆம் நிதியாண்டில் 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்க அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு: “தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், 2026-2027-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும். இந்த அறிவிப்பை செயல்படுத்த எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அரசாணை: ஒரு விவசாய மின் இணைப்புக்குச் சராசரியாக ரூ.1.5 லட்சம் வீதம், 50,000 இணைப்புகளுக்கான தொடர் அல்லாத உள்கட்டமைப்புச் செலவினமான ரூ.750 கோடியை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஏற்கும். மேலும், ஒரு இணைப்புக்குச் சராசரியாக 6.5 எச்.பி. எனக் கணக்கிடப்பட்டு, தொடர் செலவினமாக ரூ.127.56 கோடியைத் தமிழக அரசு ஆண்டுதோறும் மின் மானியமாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 50,000 மின் இணைப்புகளும் பல்வேறு பிரிவுகளின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரித்து வழங்கப்பட உள்ளன. அதில் பொதுப்பிரிவில் இலவசமாக 16,785 இணைப்புகள், சிறு, குறு விவசாயிகளுக்கான சிறப்பு திட்டத்தில், 3,215 புதிய இணைப்புகள், சுயநிதித் திட்டத்தில் 3,372 இணைப்புகள் அரசு சிறப்புத் திட்டங்களில் 1,346 இணைப்புகள், விரைவுத் திட்டத்தில் 25,282 இணைப்புகள் என 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

நடப்பு ஆண்டில் 01.04.2026 முதல் 21.09.2026 வரையிலான காலகட்டத்தில் ஏற்கனவே 7,313 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பின்னேற்பு ஒப்புதலும் இந்த அரசாணையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 7,313 இணைப்புகளும் மேற்குறிப்பிட்ட 50,000 இலக்கிற்குள் கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
கொட்டும் கனமழை - கொடைக்கானலில் நிலச்சரிவு
அடுத்த செய்தி
Despite global tensions, India's business confidence rises

தொடர்புடைய செய்திகள்