Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கொட்டும் கனமழை - கொடைக்கானலில் நிலச்சரிவு

கொட்டும் கனமழை - கொடைக்கானலில் நிலச்சரிவு

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

பகிரவும் WhatsApp Facebook

கனமழை எதிரொலியால் கொடைக்கானல் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக, கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் குறுகிய வழித்தடமான அடுக்கம் மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து பாறைகளும், மரங்களும், ஈரமண்ணும் அடித்து வரப்பட்டு சாலையில் விழுந்ததில், சாலை பல இடங்களில் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்துள்ளது. இதனால் அடுக்கம் மலைச்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில், நெடுஞ்சாலை, வருவாய் மற்றும் காவல்துறையினர் இணைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாறைகளையும், மரங்களையும் அகற்றி, பாதையைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் நிறைவடையும் வரை வாகன ஓட்டிகள் அடுக்கம் மலைப் பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளில் செல்லுமாறும், தேவையற்ற மலைப் பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதேபோல, நீலகிரியிலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு அபாயமும், மரங்கள் முறிந்து விழும் சூழலும் நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, படகு இல்லம், பைக்காரா மற்றும் தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களும் மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக மூடப்படுகிறது. சீரற்ற வானிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் தற்காலிகமாக நீலகிரி மாவட்டத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி
India-Germany R&D partnership can boost joint innovation, manufacturing: Piyush Goyal
அடுத்த செய்தி
50,000 இலவச விவசாய மின் இணைப்பு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தொடர்புடைய செய்திகள்