Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி உத்தரவு

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி உத்தரவு

இந்த ஊதிய உயர்வால் தமிழகம் முழுவதும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 74 ஆயிரம் நெசவாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 74 ஆயிரம் நெசவாளர்களின் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியை தலா 10 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வு கடந்த செப்டம்பர் 1 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வால் தமிழகம் முழுவதும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 74 ஆயிரம் நெசவாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படி ஆகிய இரண்டிலும் உயர்வு வழங்கப்படுவதால், நெசவாளர்களுக்குக் கிடைக்கும் மொத்த கூலி அதிகரிக்கும். இதனால், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நெசவாளர்களின் வருவாய் உயர்வதுடன், கைத்தறித் தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெண்டர் அறிவிப்பு
அடுத்த செய்தி
பழைய தங்கத்துக்கு கூடுதல் மதிப்பு: தனிஷ்க் நிறுவனம் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்