Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மக்களே கவனம் - வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு!

மக்களே கவனம் - வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு!

அக்டோபரில், சில பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக காணப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பருவ மழைக்காலமான அக்டோபரில், சில பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக காணப்படும். கடந்த 6-ம் தேதி பதிவான தரவுகளின் படி, சில இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.4°C ஆக பதிவாகி, இயல்பைவிட 2.5°C அதிகமாக இருந்தது.

அதேவேளையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கும் வாய்ப்பு நீடிக்கிறது. இன்று அக்டோபர் 8 முதல் 13 வரை இடியுடன் கூடிய மழை வாய்ப்பு இருக்கிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், பகலில் வெப்பநிலை அதிகரித்தாலும் மாலை நேரங்களில் வானிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.
முந்தைய செய்தி
சிறைக் கைதிகளிடம் வரவேற்பு பெறும் ‘செஸ்’
அடுத்த செய்தி
ஏர்டெல்லில் புதிய போஸ்ட்பெய்டு திட்டம் - இதுவும் இலவசமாம்..

தொடர்புடைய செய்திகள்