Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வங்கக்கடலில் புயல் - எங்கெல்லாம் கனமழை?

வங்கக்கடலில் புயல் - எங்கெல்லாம் கனமழை?

13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று, இன்று புயலாக மாறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை நெருங்கும்போது மிகத் தீவிர புயலாக மாறக்கூடும். ஆந்திரா மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.


புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 பிற மாவட்டங்களிலும் லேசாதனது முதல் மிதமான மழை இருக்கக் கூடும். நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
September industrial output to slow to 6% from 8%
அடுத்த செய்தி
Rising global demand, lower price to boost rice exports: IREF

தொடர்புடைய செய்திகள்