Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கூட்டுறவு வங்கியில் வீட்டுக் கடன் வரம்பு ரூ.1.40 கோடியாக உயர்வு

கூட்டுறவு வங்கியில் வீட்டுக் கடன் வரம்பு  ரூ.1.40 கோடியாக உயர்வு

வீட்டு வசதி கடன்களுக்கான உச்சவரம்பு ரூ. 1.40 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டு வசதி கடன்களுக்கான உச்சவரம்பு ரூ. 1.40 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நகர மற்றும் புறநகர பகுதி மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்க பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் மேம்பட்ட நிதி உதவிகளை வழங்கும் நோக்கத்துடனும், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டுக்கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

நகரக் கூட்டுறவு வங்கிகள் சிலவற்றில் தனிநபர் வீட்டுக்கடன் உச்சவரம்பு இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை விட குறைவாக வழங்கப்பட்டு வந்ததும், வங்கிக்கு வங்கி வேறுபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. 


பொதுமக்கள் முழுமையாக பயனடையும் வகையில் தற்போது உரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்ச வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சமாகவும், ரூ. 100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை கொண்ட வங்கிகளுக்கு வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாகவும், கடன் சங்கங்களுக்கு ரூ 1. கோடியாகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், பொதுமக்களின் மாதாந்திரத் தவணைச் சுமையைக் குறைக்கும் வகையில், கடன்களை திருப்பி செலுத்தும் அவகாசத்தை 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
AI models produced proofs challenging major theories in maths, computing, physics: OpenAI
அடுத்த செய்தி
Paint demand stays muted through festive season

தொடர்புடைய செய்திகள்