Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காரைக்காலில் இ-ஆட்டோ ஷோரூம்: திறந்து வைத்த அமைச்சர் ராஜவேலு

காரைக்காலில் இ-ஆட்டோ ஷோரூம்: திறந்து வைத்த அமைச்சர் ராஜவேலு

நிகழ்ச்சியில் எம்எல்ஏ நாஜிம், நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், நாகை நகர மன்ற தலைவர் மாரிமுத்து, காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

புதுச்சேரி யூனியனுக்கு உட்பட்ட காரைக்காலில் புதிதாகத் தொடங்கப்பட்ட உதயம் மோட்டார்ஸ் ஷோரூமை, புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு திறந்து வைத்தார்.

இந்த ஷோரூமில் பயணிகள் பயன்பாட்டுக்கான ஆட்டோ மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் என இரண்டு வகையான இ-ஆட்டோக்கள் வாகன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஷோரூம் உரிமையாளர் ஷாஜஹான் கூறுகையில், "திறப்பு விழாவை முன்னிட்டு பயணிகள் ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான தீபாவளிப் பரிசும், சரக்கு ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான தீபாவளிப் பரிசும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு 90 சதவீதம் வரை கடன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார். 


நிகழ்ச்சியில் எம்எல்ஏ நாஜிம், நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், நாகை நகர மன்ற தலைவர் மாரிமுத்து, காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி
Fine-variety rice sale begins in Tiruppur
அடுத்த செய்தி
நடுத்தர மக்களின் சேமிப்பைக் கரைக்கும் உணவு பணவீக்கம்

தொடர்புடைய செய்திகள்