Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறப்பு பொருளாதார மண்டல பொருட்களை திரும்பப் பெற புதிய விதி

சிறப்பு பொருளாதார மண்டல பொருட்களை திரும்பப் பெற புதிய விதி

சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து பொருட்கள் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அவற்றைத் திரும்பக் கொண்டுவர வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZ) உள்ள நிறுவனங்கள், உள்நாட்டுச் சந்தைக்கு (DTA) விற்பனை செய்த பொருட்களை வாங்குபவர்கள் நிராகரித்தால், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. ஃபேஷன் மாற்றம், சந்தை நிலவர மாற்றம் அல்லது விற்பனை ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றாதது போன்ற காரணங்களால் பொருட்களை வாங்குபவர்கள் ஏற்க மறுத்தால் இந்த விதிகள் பொருந்தும்.


சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து பொருட்கள் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அவற்றைத் திரும்பக் கொண்டுவர வேண்டும். திரும்பப் பெறப்படும் பொருள்களின் அடையாளத்தை உரிய அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பொருட்களை வாங்க மறுத்த உள்நாட்டு வாடிக்கையாளர் உள்ளீட்டு வரிக் கடன் உள்ளிட்ட எந்த வரிச் சலுகையையும் பெறவில்லை என்பதற்கான ஆதாரத்தை நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். திரும்பப் பெறப்பட்ட பொருட்களுக்குத் தனியாக இருப்புப் பதிவேடும் பராமரிக்க வேண்டும்.

திரும்பப் பெறப்பட்ட பொருட்களின் அசல் நிலையில் எந்த மாற்றமும் செய்யாமல், அவற்றை அதே வாடிக்கையாளருக்கோ அல்லது வேறு வாடிக்கையாளருக்கோ மீண்டும் விற்பனை செய்யலாம். புதிய விற்பனையின்போது உரிய வரியைச் செலுத்த வேண்டும். ஏற்கெனவே செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழுதுபார்ப்புக்காகத் திரும்பக் கொண்டுவரப்படும் பொருட்களை, வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அல்லது அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அல்லது உத்தரவாதக் காலம் முடிவதற்குள் திரும்பக் கொண்டுவரலாம். இவற்றில் எது பிந்தையதோ அந்தக் காலக்கெடு பொருந்தும். மேலும் பழுதுபார்ப்புக்கான செலவின் மதிப்புக்கு வரி செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 1 முதல் ஓராண்டுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையில் சலுகை வரியுடன் பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. எனினும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களுக்கும் சில உணவுப் பொருள்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது.

2025 மார்ச் 31-ம் தேதிக்குள் உற்பத்தியைத் தொடங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். பொருட்கள் மண்டலத்திலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 20 சதவீத மதிப்புக் கூட்டலும் அவசியம். உள்நாட்டுச் சந்தைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் ஆண்டு மதிப்பு, முந்தைய 3 நிதியாண்டுகளில் பதிவான அதிகபட்ச ஆண்டு ஏற்றுமதி மதிப்பில் 30 சதவீதத்தைத் தாண்டக் கூடாது.

உலகளாவிய வர்த்தகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதும், அவற்றின் பொருள்களை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வதற்கு உதவுவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாகும்.


முந்தைய செய்தி
விதிமீறிய ஆம்னி பேருந்துகள் ரூ.69.16 லட்சம் அபராதம்
அடுத்த செய்தி
தாராபுரம், மதுராந்தகத்துக்கு திட்டங்கள் அறிவித்த முதல்வர் விஜய்

தொடர்புடைய செய்திகள்