Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பழைய மின் மீட்டர்களை புதிய கட்டிடங்களில் பொருத்த தடை: புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

பழைய மின் மீட்டர்களை புதிய கட்டிடங்களில் பொருத்த தடை: புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

இந்த முறைகேடுகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பழைய கட்டிடங்களை இடித்துவிட்டுப் புதிய கட்டிடம் கட்டிய பின், பழைய மின் மீட்டர்களையே மீண்டும் பொருத்தும் முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பழைய கட்டிடங்களை இடித்துப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்லது வணிக வளாகங்கள் கட்டும்போது, பல இடங்களில் மின் இணைப்புகள் தற்காலிகமாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, புதிய மின் இணைப்புக்கான கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக, அதே பழைய சர்வீஸ் எண்களில் பழைய மீட்டர்களையே மீண்டும் பொருத்தும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டிடங்களை மாற்றி அமைப்பதற்கு தற்காலிகமாகப் பிரிக்கப்பட்ட தாழ்வழுத்த மின் இணைப்பு, ஒரு வருடத்திற்கு மேல் மீண்டும் இணைக்கப்படாமல் இருந்தால், அந்த இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு கணக்கு முடிக்கப்படும். அதன்பின்னர், புதிய இணைப்பு வேண்டுமென்றால் புதிய நடைமுறைகளைப் பின்பற்றித் தான் விண்ணப்பிக்க வேண்டும்.

இடிக்கப்படும் பழைய கட்டிடத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால், கட்டுமானப் பணிகளுக்காக நுகர்வோரின் சம்மதத்துடன் 'ஒரே ஒரு மின் இணைப்பு' மட்டும் தற்காலிக விநியோகக் கட்டண முறைக்கு மாற்றப்படும். கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு, உரிய கட்டணத்தைச் செலுத்தி அந்த ஒரு இணைப்பை மட்டும் நிரந்தரப் பயன்பாட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

கட்டிடத்தில் இருந்த மற்ற மின் மீட்டர்கள் உடனடியாக அகற்றப்பட்டு, நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டதற்கான கணக்கு முடிக்கப்பட வேண்டும். பின்னர் உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் புதிய மின் இணைப்புகளுக்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அனைத்து அதிகாரிகளும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இதில் முறைகேடுகள் நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்: ஆவின்
அடுத்த செய்தி
ஓய்வூதிய கோரிக்கைகளுக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்

தொடர்புடைய செய்திகள்