Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காசா கிராண்ட் பிரீமியம் குடியிருப்பு அறிமுகம் - எங்கு தெரியுமா?

காசா கிராண்ட் பிரீமியம் குடியிருப்பு அறிமுகம் - எங்கு தெரியுமா?

'காசா கிராண்ட் வியன்னா' என்ற புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

காசா கிராண்ட் நிறுவனம் சென்னையின் முக்கிய பகுதியான அடையாறில் 'காசா கிராண்ட் வியன்னா' என்ற புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


எல்.பி. சாலையில் அமைந்துள்ள இந்த குடியிருப்பில், 4 கட்டிடங்களில் 98 பிரீமியம் 3 மற்றும் 4 படுக்கையறை வீடுகள் உள்ளன. மேலும், 30 பிரீமியம் வாழ்க்கை முறை வசதிகளும் இதனுடன் வழங்கப்படுகின்றன. இந்த வீடுகளின் விலை ரூ.5.10 கோடியில் இருந்து தொடங்குகிறது.

1.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த காசா கிராண்ட் வியன்னா, 70 சதவீத திறந்தவெளி, இயற்கை சூழலுடன் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் இருந்தாலும், இது ஒரு விசாலமான உணர்வை அளிக்கிறது. இதில் 98 வீடுகளும் நல்ல காற்றோட்டம் மற்றும் இயற்கை வெளிச்சம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 


வீட்டின் இருபுறமும் உள்ள பிரத்யேக பால்கனிகளில் இருந்து நகரம் மற்றும் கடலின் அழகை ரசிக்கலாம். விசாலமான ஹால் மற்றும் டைனிங் அறைகள், 16 அடி அகலமுள்ள மாஸ்டர் பெட்ரூம்கள் மற்றும் சுமார் 11 அடி அகலமுள்ள மற்ற பெட்ரூம்கள் என வீடுகள் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளன.

உடற்பயிற்சிக் கூடம், மினி கோல்ப், பில்லியர்ட்ஸ், ஓய்வாக நடப்பதற்கான நடைபாதை, மாடியில் திறந்தவெளி அரங்கம், ஸ்கை லவுஞ்ச் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்தாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
தேவை அதிகரிப்பால் உயர்ந்த தாமிரம் விலை - வெள்ளி, அலுமினியம் விலை குறைவு
அடுத்த செய்தி
டீஇஇ நிறுவனத்துக்கு ரூ.55 கோடி காற்றாலை கோபுர ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்