Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஊட்டி மலைப்பூண்டு கிலோ ரூ.600-ஆக அதிகரிப்பு

ஊட்டி மலைப்பூண்டு கிலோ ரூ.600-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் நிலவிய கடும் வறட்சியால் பூண்டு சாகுபடி பெருமளவில் நடைபெறவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சியில் ஊட்டி மலைப்பூண்டு விலை கிலோ ரூ.600-ஆக அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக பூண்டு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாட்டுப் பூண்டு அதிகபட்சமாக கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக ரூ.260 வரையும், கொடைக்கானல் மலைப்பூண்டு ரூ.300 வரையும் விற்பனையானது.


தற்போது ஊட்டியில் இருந்து வரும் மலைப்பூண்டு ரூ.600-க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து பூண்டு மண்டி விற்பனையாளர் சரவணன் கூறுகையில், "தமிழகத்தில் நிலவிய கடும் வறட்சியால் பூண்டு சாகுபடி பெருமளவில் நடைபெறவில்லை. மத்திய பிரதேசத்திலிருந்து வரவழைத்து விற்பனை செய்யப்படுகிறது. 

கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் இருந்து வரவழைக்கப்படும் மலைப் பூண்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. கொடைக்கானல் மலைப் பூண்டு ரூ.300 வரையும், ஊட்டி மலைப்பூண்டு ரூ.600 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

 தமிழகத்தில் இனி பூண்டு சாகுபடி நடைபெற்று, அறுவடை செய்தால் மட்டுமே விலை குறையும்" என்றார்.

முந்தைய செய்தி
பட்டியலிடப்பட்ட முதல் நாளில் சாதித்த ஐபிஓக்கள்
அடுத்த செய்தி
Over 6,000 candidates to take Group II exams

தொடர்புடைய செய்திகள்