Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அன்பில் மகேஷ் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு

அன்பில் மகேஷ் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு

அன்பில் மகேஷை கடந்த 6ம் தேதி கைது செய்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அன்பில் மகேஷை கடந்த 6ம் தேதி கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷை கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி எல்எஸ். சத்தியமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரக்க அனுமதிக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மகேஷ் தரப்பில் தனது இல்லத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னனு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து, அன்பில் மகேஷின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, 3 மனுக்களின் மீதான விசாரணையையும் நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முந்தைய செய்தி
காலண்டர், டைரி ஆர்டர் குறைவு: உற்பத்தியாளர்கள் கவலை
அடுத்த செய்தி
Festive demand, public capex to support industrial activity in H2 FY27: UBI

தொடர்புடைய செய்திகள்