Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தூத்துக்குடியில் சரக்கு வாகன நிறுத்த முனையம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடியில் சரக்கு வாகன நிறுத்த முனையம் அமைக்கும் திட்டம்

கூடுதல் சரக்கு வாகன நிறுத்த முனையம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

பகிரவும் WhatsApp Facebook

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக இணைப்புச் சாலை அருகே 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் கூடுதல் சரக்கு வாகன நிறுத்த முனையம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

துறைமுகத்துக்கு வரும் சரக்குக் கொள்கலன் லாரிகளுக்கு போதிய நிறுத்த வசதிகளை ஏற்படுத்தி, சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சரக்குப் போக்குவரத்தைச் சீரமைத்து, துறைமுகச் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தூத்துக்குடியில் 173 ஏக்கரில் பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சரக்குக் கிடங்குகள், லாரி நிறுத்துமிடங்கள், ரயில் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. 


இந்தப் பல்முனைப் போக்குவரத்துப் பூங்கா திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


முந்தைய செய்தி
Indian-Americans seek public office, back favourable candidates in US midterms
அடுத்த செய்தி
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ - எவ்வளவு கட்டணம்?

தொடர்புடைய செய்திகள்