Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.750 கோடி... பூந்தமல்லி டூ வடபழனி! மெட்ரோவில் டக்குன்னு போலாம்! பச்சைக்கொடி காட்டிய பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும்!

ரூ.750 கோடி... பூந்தமல்லி டூ வடபழனி! மெட்ரோவில் டக்குன்னு போலாம்! பச்சைக்கொடி காட்டிய பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும்!
பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும் பச்சைக்கொடி அசைத்து மெட்ரோ ரயில்சேவையை தொடங்கி வைத்தனர்

அவரைத்தொடர்ந்து அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் வரவேற்பு அளித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

ரூ.750 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தை முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றப்பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் சென்னை விமானநிலையம் நேரில் சென்று வரவேற்பு அளித்தார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜயும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பூந்தமல்லி – வழபழனி மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தனர். பின்னர் மெட்ரோ பயணக்கட்டணம் செலுத்தி மோடியும் விஜயும் மெட்ரோவில் ஒன்றாக பயணம் செய்தனர். அப்போது அதிகாரிகள் மெட்ரோ ரயில் சேவை குறித்து பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.

முதல் கட்டமாக இந்த மெட்ரோ ரயில் 11 வழித்தடங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ரூ.3700 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டியதோடு முடிவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார். அதோடு சென்னை ஐஐடி வளாகத்துக்குச் சென்று அங்குள்ள ஜலகண்டேஸ்வர் கோயிலில் வழிபாடு செய்தார். மேலும் ஐஐடியில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மூளைகள் குறித்து கேட்டறிந்தார். 

முந்தைய செய்தி
பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு
அடுத்த செய்தி
ரூ.13,000 கோடி... முதல்வர் விஜய் கையை பிடித்து இழுத்து திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தொடர்புடைய செய்திகள்