Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரெப்போ வட்டி 0.25% உயர வாய்ப்பு - இந்தியாவுக்கு கூடுதல் அழுத்தம்

ரெப்போ வட்டி 0.25% உயர வாய்ப்பு - இந்தியாவுக்கு கூடுதல் அழுத்தம்

ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ வட்டியை குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ வட்டியை குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வட்டி உயர்வு நடவடிக்கை மீண்டும் தொடங்கலாம் என்றும் கணித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு அக்டோபர் 5 முதல் 7-ம் தேதி வரை கூடுகிறது. தற்போது ரெப்போ வட்டி 5.25 சதவீதமாக உள்ளது. எஸ்பிஐ கணிப்பு நிறைவேறினால், அது 5.50 சதவீதமாக உயரும். “தற்போதைய சூழலில் 0.25 சதவீத வட்டி உயர்வுக்கான வாய்ப்பு தெளிவாக அதிகரித்துள்ளது” என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.82 சதவீதமாக இருந்தது. செப்டம்பரில் இது சுமார் 5.65 சதவீதமாக உயரலாம். அக்டோபர் மற்றும் நவம்பரில் பணவீக்கம் 6.5 சதவீதத்தைக் கடக்கலாம் என்றும், 2027 தொடக்கத்தில் மீண்டும் 6 சதவீதத்துக்கு கீழ் வரலாம் என்றும் எஸ்பிஐ கணித்துள்ளது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வு பரவலாகி வருவது முக்கிய கவலையாக உள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் உலக அளவில் வட்டி விகிதங்கள் உயர்வதும் இந்தியாவுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.


ரூபாயின் மதிப்பு சரிவும் ரிசர்வ் வங்கிக்கு சவாலாக உள்ளது. டாலருக்கு எதிராக ரூபாய் பலவீனமடைவதால் இறக்குமதி செலவு அதிகரித்து, பணவீக்கத்தை மேலும் உயர்த்தும் அபாயம் உள்ளது. இதனால் முன்கூட்டியே வட்டி உயர்த்துவது பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்பது எஸ்பிஐ ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருப்பதும் வட்டி உயர்வுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. 

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 8 சதவீதமாக இருந்த நிலையில், கடன் தேவைவும் வலுவாக உள்ளது. இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்தினாலும் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம் என கருதப்படுகிறது.


எனவே, பணவீக்கம் மேலும் உயர்வதற்கு முன்பாக ரெப்போ வட்டியை குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உயர்த்துவது தேவையான நடவடிக்கையாக இருக்கலாம் என்பது எஸ்பிஐ ஆய்வின் மதிப்பீடாகும். ரிசர்வ் வங்கியின் முடிவு அக்டோபர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

முந்தைய செய்தி
எண்ணெய் விலை உயர்வு; ஆனாலும் 7% வளர்ச்சி சாத்தியம்: நிலேஷ் ஷா தகவல்
அடுத்த செய்தி
மக்களே குடையை மறந்துடாதீங்க - 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

தொடர்புடைய செய்திகள்