Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.1.50 கோடியில் பட்டு நூற்பு அலகு - எங்கு தெரியுமா?

ரூ.1.50 கோடியில் பட்டு நூற்பு அலகு - எங்கு தெரியுமா?

ஒரே நேரத்தில் 400 கூட்டிலிருந்து பட்டு நூற்பு மேற்கொள்ளும் வகையில் இந்த அலகு அமைக்கப்படவுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஈரோடு அருகே சித்தோட்டில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் தனியார் துறையில் பட்டு நூல் நூற்பு அலகு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரே நேரத்தில் 400 கூட்டிலிருந்து பட்டு நூற்பு மேற்கொள்ளும் வகையில் இந்த அலகு அமைக்கப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் பட்டு நெசவாளர்களுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான மானியங்களை வழங்க பட்டுவளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.

 
மத்திய அரசின் பட்டுத் துறைத் திட்டமான ‘சில்க் சமக்ரா-2’ திட்டத்தின் கீழ், மல்பெரி தோட்டம் அமைத்தல், பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டுதல், பட்டுப்புழு வளர்ப்புக்கான தளவாடங்கள் வாங்குதல், கிருமிநாசினிகள் மற்றும் மருந்துப் பொருள்கள் வாங்குதல், பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி பெறுதல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பட்டு நூல் நூற்பு அலகிற்கு மத்திய- மாநில அரசுகள் மானியம் ரூ 1.10 கோடி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை - மருத்துவர் சொல்வதென்ன.?
அடுத்த செய்தி
Melania Trump helps forge a ceasefire deal in a Russian-occupied Ukrainian city

தொடர்புடைய செய்திகள்