Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிலர் பணம் பெறுவது உண்மைதான்; எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் வினோத் தகவல்

சிலர் பணம் பெறுவது உண்மைதான்; எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் வினோத் தகவல்
ஏஐ புகைப்படம்

சிலர் பணம் பெறுவது உண்மைதான். எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்திற்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் கூரைகள் தேவைப்படுகிறதோ, அங்கு புதிதாக கூரைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மழையால் பயிர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அபாயகரமான பகுதிகளைக் கண்டறிந்து வாய்க்கால்களைத் துார்வாருவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறப்படுவதாக எழும் புகார்கள் குறித்து கேட்டபோது, சிலர் பணம் பெறுவது உண்மைதான். எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்கள் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
L&T நிறுவனத்தில் 5 புதிய வாரியங்கள்
அடுத்த செய்தி
ரயில்வே பணி நியமனம் 2026: 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்