Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025-26-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பைத் தளர்த்தி, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு அந்தந்த நிறுவனங்கள் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிவோருக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வழங்கப்படும்.

நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்காக ரூ.367.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
பழனி முருகன் கோயில் பிரசாதம் விலை உயர்வு: லிஸ்ட் இதோ
அடுத்த செய்தி
பெரிதாக மாற்றமின்றி முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

தொடர்புடைய செய்திகள்