Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நெசவாளர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கோரிக்கை

நெசவாளர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கோரிக்கை

நெசவாளர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை (போனஸ்) வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

நெசவாளர்களுக்கு தீபாவளி முன்பணம் மற்றும் நீண்டநாட்களாக உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.கந்தவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் வேட்டி உற்பத்திக்கு பிக் ஒன்றுக்கு 11 பைசாவும், சேலை உற்பத்திக்கு 12.50 பைசாவும் கணக்கிடப்பட்டு, அதில் 90 சதவீத முன்பணம் கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்கங்களுக்கு கைத்தறி துறை மூலம் விடுவிக்கப்பட்டது.


கடந்த 16-ம் தேதி விசைத்தறி நெசவாளர்களுக்கு வேட்டி உற்பத்தி செய்ய பிக் ஒன்றுக்கு 14 பைசாவும், சேலை உற்பத்தி செய்ய பிக் ஒன்றுக்கு 13 பைசாவும் கூலி உயர்வு நிர்ணயம் செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நெசவாளர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை (போனஸ்) வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 எனவே, அக்டோபர் மாதத்துக்கான கூலி மற்றும் நவம்பர் மாத முதல் வாரத்துக்கு உண்டான முன்பணத்தை, பழைய மற்றும் புதிய கூலி உயர்வுக்கான வித்தியாச தொகையோடு இணைத்து வழங்க வேண்டும். 

மேலும், 2024, 2026 பொங்கல் வேட்டி சேலைத் திட்டங்களின் கீழ் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வர வேண்டிய பழைய நிலுவைத் தொகைகளையும் சேர்த்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Vadipatti-Thamaraipatti bypass to spur trade, connectivity
அடுத்த செய்தி
விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் அரிசி விலை உயர்வு

தொடர்புடைய செய்திகள்